20 ஓவர்களை குறித்த நேர காலத்துக்குள் பந்தவீசத்தவறிய காரணத்துக்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித்துக்கு இந்திய மதிப்பில் 12 இலட்சம் ரூபா அபராம் விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவர்களை வீசத் தவறியது. பந்து வீசுவதில் தாமதம் செய்த குற்றத்துக்காக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணித்தலைவர் ஸ்டீபன் ஸ்மித்துக்கு 12 இலட்சம்  இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

20 ஓவர்களை குறித்த நேர காலத்துக்குள் பந்தவீசத்தவறிய காரணத்துக்காக, இதற்கு முன்னர் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லி, டெல்லி கெப்பிட்டல்ஸ் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு தலா 12  இலட்சம் இந்திய ரூபா அபராதம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.