தொழில் அதிபருடன் காஜல் அகர்வாலுக்கு திருமணம்

Published By: Digital Desk 3

07 Oct, 2020 | 04:13 PM
image

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கும் மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் கௌதம் கிச்சலுவுக்கும் திருமணம் நடைபெறவுள்ளது.

இதனை காஜல் அகர்வாலே உறுதிப்படுத்தி உள்ளார்.

இதுகுறித்து காஜல் அகர்வால் நேற்று இன்ஸ்டாகிராம் மற்றும்  டுவிட்டர் பக்கங்களில்,

“எனக்கும் கௌதம் கிச்சலுக்கும் வருகிற 30தி ஆம் திகதி மும்பையில் திருமணம் நடக்க உள்ளது. குடும்பத்தினர் மத்தியில் எளிமையாக இந்த திருமணம் நடக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கொரோனா நோய் தொற்று காலம் எங்கள் மகிழ்ச்சியில் மெல்லிய ஒளியை பாய்ச்சி உள்ளது. நாங்கள் இருவரும் இணைந்து எங்கள் வாழ்க்கையை தொடங்க இருக்கிறோம். இது உங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்பதை அறிவோம். இத்தனை ஆண்டுகளாக நீங்கள் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. வாழ்க்கையில் புதிய பயணத்தை தொடங்குகிறோம். இதற்கு உங்கள் ஆசிர்வாதத்தை வேண்டுகிறோம். புதிய தேவை மற்றும் அர்த்தங்களோடு நான் தொடர்ந்து என்னுடைய ரசிகர்களை மகிழ்விப்பேன். உங்களின் முடிவில்லா ஆதரவுக்கு நன்றி.”  இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ள போகும் காஜல் அகர்வாலுக்கு, நடிகர், நடிகைகளும், ரசிகர்களும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.

காஜல் அகர்வால் தற்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவியின் ஆச்சார்யா ஆகிய படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிட்டிற்கு 'டெஸ்ட்'...

2025-03-26 16:48:38
news-image

சூர்யாவுடன் மோதும் சசிகுமார்

2025-03-26 16:03:40
news-image

'ஃபைனல் டெஸ்டினேஷன் ப்ளட்லைன்ஸ்' திகில் திரைப்பட...

2025-03-26 15:08:17
news-image

சிறந்த அனுபவம் கிடைக்க 'எம்புரான்' படத்தை...

2025-03-26 10:21:42
news-image

நடிகை பாவனா நடிக்கும் ' தி...

2025-03-26 10:04:13
news-image

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2025-03-26 09:59:34
news-image

விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்' படத்தின்...

2025-03-26 09:55:07
news-image

இயக்குனர் பாரதிராஜா மகன் மனோஜ் மாரடைப்பால்...

2025-03-25 20:46:51
news-image

'எம்புரான்' திரைப்படத்தின் முதல் பாடலின் லிரிக்கல்...

2025-03-25 19:03:07
news-image

பொங்கலுக்கு மோதிக்கொள்ளும் ஜனநாயகன் - பராசக்தி

2025-03-25 15:16:33
news-image

நாளை முதல் ஓடிடியில் வெளியாகிறது "முஃபாசா:...

2025-03-25 12:47:10
news-image

புற்று நோயால் பாதிக்கப்பட்ட பிரபல கராத்தே...

2025-03-25 11:17:30