Published by R. Kalaichelvan on 2020-10-07 15:48:46
பொதுப் போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்தும் போது சுகாதார ஆலோசனைகளுக்கமைய செயற்படுமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
முகக்கவசமில்லாத பயணிகளை பஸ்களில் ஏற்ற வேண்டாம் என, அனைத்து பஸ் ஊழியர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளதாக, இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இதேவேளை, சுகாதார நடைமுறைகளை உரிய வகையில் பின்பற்றாத பஸ்களின் அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பஸ்களில் கிருமி ஒழிப்பினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கொமாண்டர் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.