யாழில் ஓட்டுமடம் சுமன் என பொலிஸாரால் அழைக்கப்படும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்த இளைஞனின் வீட்டுக்குள் புகுந்த மற்றொரு வன்முறைக் கும்பல், அடாவடியில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றது என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தார்.

கம்பிகள், வாள்களுடன் சென்ற 4 பேர் கொண்ட வன்முறைக் கும்பல் வீட்டுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை சேதப்படுத்தியதுடன் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பாரவூர்தியையும், சேதப்படுத்திவிட்டுத் தப்பித்துள்ளது.

இணுவிலில் உள்ள ஆவா வினோதனின் வீட்டுக்குள் புகுந்து நேற்று பிற்பகல் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் இன்று ஓட்டுமடம் சுமனின் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.