ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவரும் இன்று மாலை கொழும்பில் ஒன்று கூட உள்ளனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை, இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெறவுள்ள விசேட மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொள்வதற்காகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மாநாடுகள் குறித்து இதில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றுது.