பிரபல பாதாள குழு உறுப்பினர் ஒருவரின் சகாக்கள் இருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொபெய்கனே பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கொபெய்கனே - பஹல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சந்தேக நபர்களிடமிருந்து 1 கிராம் 830 மில்லிகிராம் ஹெரோயின், 2 கத்திகள், கித்துல் கட்டைகள் 2, கைத்தொலைபேசிகள் 6, 11 சிம் அட்டைகள், போலி சாரதி அனுமதிப் பத்திரம், ஜீப் மற்றும் கார் ஆகியன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்தினபுரி மற்றும் பாதுக்கை பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 42 வயதான நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் அவிசாவளை, ஹோமாகம, பூகொட மற்றும் கங்கொடவில நீதிமன்றங்களில குறித்த சந்தேக நபர்கள் இருவருரின் பெயரிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.