அடுத்த ஆண்டு மே மாதத்தில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக தற்போது முதலமைச்சராக பணியாற்றி வரும் எடப்பாடி கே. பழனிச்சாமி தெரிவு செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
கடந்த மாதம் 24ஆம் திகதியன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் நிர்வாகிகள் அடுத்த ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தல் அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இதுதொடர்பாக, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கேபி முனுசாமி அக்டோபர் 7 ஆம் திகதியன்று அதிமுக சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது தொடர்பில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோரின் ஆதரவாளர்கள் மற்றும் நடுநிலையாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிமுகவில் தலைமை கழகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடிபழனிசாமி தெரிவுசெய்யப்பட்டு இருப்பதாக, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அத்தருணத்தில் முதல்வரும் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுகவில் 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டிருப்பதாகவும், அந்த குழுவில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சிவி சண்முகம், ஜெயக்குமார், காமராஜ், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி மற்றும் கழகத்தின் முன்னணி நிர்வாகிகளான ஜேசிடி பிரபாகர், ப.மோகன், மாணிக்கம், மனோஜ் பாண்டியன், கோபாலகிருஷ்ணன் ஆகிய பதினொரு பேர்களின் பெயர் இடம்பெற்றதாகவும் அவர் அறிவித்தார்.
இதன் மூலம் அதிமுகவில் நடைபெற்று வந்த உட்கட்சி பூசல் முடிவிற்கு வந்திருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே முதலமைச்சர் வேட்பாளர் மற்றும் வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் ஆகியோரின் தேர்வு கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.பி.முனுசாமி, எடப்பாடி கே.பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM