(வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் விற்பனையாகும் போத்தல் கள்ளாலும் மதுபான கடைகளாலுமே தனிப்பட்டவர்களுக்கும் சமூகத்துக்கும் குடும்பங்களுக்கும் மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் குரல் கொடுத்ததுடன் வீதிகள் பஸ் நிலையம் ஆகியவற்றில் கையெழுத்து பெறப்பட்டு மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டது.

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு மன்னாரில் நான்கு அமைப்புக்கள் இன்று மன்னார் நகரில் பேரணிகளை நடாத்தினர்.

மன்னார் நகரில் நடாத்தப்பட்ட இவ் பேரணிகளை காணாமல் ஆக்கப்பட்டோர் ஒன்றியம், மன்னார் மாவட்ட பிரiஐகள் சபை ஒன்றியம், மன்னார் மாவட்ட பிரiஐகள் குழு, போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் அமைப்பு ஆகியன இவ் பேரணிகளுக்கான ஓழுங்குகளை மேற்கொண்டிருந்தன.

இதில் மன்னார் பிரiஐகள் குழு தலைவர் அருட்பணி.செபமாலை அடிகளார், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் அந்தோனி மார்க் மற்றும் அரசியல் பிரமுகர்கள் உட்பட அதிகமான சிறுவர் சிறுமிகள் பெண்கள் ஆண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இவ் கவனயீர்ப்பு பேரணியில் நான்கு முக்கிய விடயங்களை கலந்து கொண்டோர் முன்னிலைப்படுத்தி குரல் கொடுத்தனர்.

அதாவது பல்வேறு வழிகளில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மையான நிலை என்ன? இவர் அனைவரும் உடனடியாக அவரவர் குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

யுத்தம் முடிந்து பல ஆண்டுகளாகியும் இன்னும் அரசியல் கைதிகளுக்கான ஒரு தீர்வு எட்டப்படாமை அரசின் கையாளாகத் தன்மையையும் அசமந்த போக்கையும் காட்டுகின்றது.

பெண்கள் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களும் பாலியல் வன்முறைகளும் இடம்பெற்று வருவதுடன் மன்னாரைப் பொறுத்தமட்டில் போத்தல் கள்ளும் மதுபான கடைகளாலுமே அதிகமான மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பெண்கள் சமூகம் குரல் கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவ் நான்கு அமைப்புகளும் பல கோணங்களிலிருந்து புறப்பட்டு ஈற்றில் மன்னார் மாவட்ட செயலாளர் அலுவலகத்துக்கு முன்பாக மன்னார் பஸ் நிலையத்தை பார்த்த வண்ணம் பதாதைகள் ஏந்தியவாறு நீண்ட நேரமாக தங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தியதும் மன்னார் மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஸரணி டீ மெல்லிடம் மகஐர்கள் ஒப்படைக்கப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.