வெள்ளவத்தை பிரதேசத்திற்குள் நிரந்தர வதிவாளர்கள் மற்றும் தற்காலிக வதிவாளர்கள் மற்றும் சட்டவிரோத வதிவாளர்கள் ஆகியோர் தங்களுடைய விபரங்களை வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்தில் அறிவிக்குமாறு கோரி துண்டுப்பிரசுரம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

குறித்த துண்டுப் பிரசுரத்தில் பொலிஸ் சட்டக்கோவை 76 ஆம் இலக்க சட்டத்தின் படி குறித்த விபரங்கள் சேகரிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் குற்றங்களை தடுப்பதற்கும் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கும் தமது இல்லத்திற்கு வெளிநபர்களை வேலைக்காக அழைத்து வருவதைக் குறைத்துக்கொள்ளுமாறும் குறித்த துண்டுப்பிரசுரத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு எவரையேனும் அழைத்து வருவதாயின் எழுத்து மூலமாக வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.