சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை பெற்றுக்கொள்ள இந்திய தரப்புடன் பேச்சுவார்த்தை: உதய கம்மன்பில

Published By: J.G.Stephan

06 Oct, 2020 | 05:26 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

திருகோணமலை சீனக்குடா எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து பெற்றுக்கொள்ள முயற்சிகள் எடுக்கப்பட்டாலும் இருதரப்பு உடன்படிக்கைகளை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது. எனினும் இந்தியா பயன்படுத்தும் எண்ணெய் குதங்களை தவிர்ந்து ஏனைய எண்ணெய் குதங்களை பெற்றுக்கொள்ள இந்திய அரசாங்கத்துடனும், இந்திய எண்ணெய் நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷா விதானகே, திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை இந்தியாவிடம் இருந்து மீண்டும் பெற்றுக்கொள்வது குறித்த நகர்வுகள் தொடர்பில் சபையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் தெரிவிக்கும் போதே அமைச்சர் உதய கம்மன்பில இவ்வாறு கூறினார், அவர் மேலும் கூறுகையில்,

திருகோணமலை சீனக்குடாவில் அமைந்துள்ள எண்ணெய் குதங்களை நாம் இந்தியாவிற்கு கொடுக்கவில்லை, ஐக்கிய தேசிய கட்சியின் காலத்தில் 2003 ஆம் ஆண்டு இந்த தாங்கிகளை நீண்டகால குத்தகைக்கு வழங்கினர். இதில் சகல எண்ணெய் தாங்கிகளையும் 75 வீத பங்கு இந்தியாவிற்கும், 25 வீத பங்கு இலங்கைக்கும் இருக்குமாறு இலங்கை  இந்திய கூட்டு எண்ணெய் நிறுவனம் ஒன்றுக்கு 35 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்துள்ளனர். 17 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எண்ணெய் தாங்கிகளை இந்தியா பெற்றுக்கொண்டாலும் இவற்றில் சகல எண்ணெய் தாங்கிகளையும் இந்தியா பயன்படுத்தவில்லை. 104 எண்ணெய் குதங்கள் வழங்கப்பட்டது. அதில் 99 குதங்கள் பாவனைக்கு உரியதாக உள்ளது. இவற்றிலும் 15 எண்ணெய் தாங்கிகளை மட்டுமே இந்தியா பயன்படுத்தி வருகின்றது. எனவே ஏனையவற்றை நாம் எமது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவருவது குறித்து குறித்த எண்ணெய் நிறுவனத்துடனும் இந்திய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னர் இது குறித்து முழுமையான தகவல்களை வழங்க முடியும். இரு தரப்பு உடன்படிக்கையை ஒரு தரப்பினருக்கு சாதகமாக மாற்றியமைக்க முடியாது. அது கடினமானது, எனினும் பாவனையில் இல்லாத சகல எண்ணெய் குதங்களையும் எமது பயன்பாட்டிற்காக பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனை பெற்று வேறு யாருக்கும் வழங்க எந்த நோக்கமும் இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56