சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டிகளை அகற்றுவதற்காக பயன்படுத்தப்படும் லேசர் சிகிச்சை மூலம் தற்போது சிறுநீர்ப்பையில் உண்டாகும் புற்றுநோய் கட்டிகளையும் அகற்ற முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
உலக அளவில் ஆண்டுதோறும் 5 லட்சம் புதிய நோயாளிகளுக்கு சிறுநீர்ப்பையில் புற்று நோய் கட்டிகள் ஏற்படுவதாகவும், பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும், உலக அளவிலான புற்றுநோயாளிகளில் சிறுநீர்ப்பையில் ஏற்படும் புற்றுநோய், ஆறாம் இடத்தில் இருப்பதாகவும் மருத்துவ விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
நாம் அருந்தும் குடிநீரில் ரசாயனம் கலந்து இருப்பதும், அவை சுத்திகரிக்கப்படாமல் அருந்துவதால் தான் சிறுநீர்ப்பையில் புற்றுநோய் ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
சிறுநீர்ப்பையில் ஏதேனும் பாதிப்பு என்றாலோ அல்லது அங்கு ஏதேனும் நீர் கட்டிகள் இருந்தாலோ, அதனை அகற்ற சிறுநீர் வெளியேறும் பாதை வழியாக பிரத்தியேக கருவியை செலுத்தி சிகிச்சையை மேற்கொள்வார்கள்.
ஆனால் தற்போது சிறுநீர்ப்பையில் ஏற்படும் கட்டிகளை அகற்ற லேசர் சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த லேசர் சிகிச்சை முறைகள் மூலமாக சிறுநீர்ப்பையில் ஏற்படும் தொடக்கநிலை புற்றுநோய்களையும் அகற்ற முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சிலருக்கு சிறுநீர்ப்பையில் மீண்டும் மீண்டும் நீர்க்கட்டிகள் ஏற்படுவதும், சிலருக்கு லேசர் சிகிச்சைக்கு பின்னரும் மீண்டும் சிறுநீர்ப்பையில் புற்றுநோய் கட்டிகள் வரக்கூடும். இதனையும் லேசர் சிகிச்சைகள் மற்றும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பின் மூலம் அகற்றி குணப்படுத்த இயலும் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
டொக்டர் பொன்ராஜ்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM