ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சைபி மரியாதையின் நிமித்தம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் சந்தித்தார். 

பாராளுமன்றத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் அரசியல் தூதுவருடன் வர்த்தகம் மற்றும் தொடர்பாடல் துறைக்கான பிரதித் தலைவர் திருமதி.அன்னே வாகியர் சட்டர்ஜியும் கலந்துகொண்டிருந்தார். 

பாராளுமன்ற செயலாளர் நாயகம் திரு.தம்மிக்க தஸநாயக்கவும் இச்சந்திப்பில் இணைந்துகொண்டிருந்தார்.