கம்பாஹா மாவட்டத்தில் புதிய கொரோனா கொத்தணி பரவலின் பி.சி.ஆர் சோதனைகளின் இறுதி முடிவுகளின் அடிப்படையில் க.பொ.த. உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சு இறுதி முடிவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருப்பதாவது, 

ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சை 11 ஆம் திகதி ஞாயிற்றுகிழமையும், க.பொ. உயர்தர பரீட்சை 12 ஆம் திகதி திங்கட்கிழமையும் ஆரம்பமாகும். பரீட்சை தொடர்பில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை.

இரண்டு பரீட்சைகளையும் திட்டமிட்டபடி நடத்த அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ளன.

எவ்வாறாயினும், சமீபத்திய கொரோனா பரவல் ஏற்படுத்திய பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட  2000 பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளை அறிய அரசாங்கம் காத்திருக்கிறது என்று அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இன்றும் நாளையும் வரவிருக்கும் கொரோனா பரிசோதனை  முடிவுகளின் அடிப்படையில் பரீட்சைகள் குறித்து கல்வி அமைச்சகம் இறுதி முடிவை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.