இந்தியாவில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் இருந்து திருச்சியிற்கு போலி நாணயத்தாள்களை காரில் கடத்தி செல்ல முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தஞ்சை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி தஞ்சை அருகே உள்ள திருக்கானூர் பட்டியில் மேற்கொண்ட சோதனையிலே போலி நாணயத்தாள் கடத்தி செல்ல முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த காரில் இலங்கை ரூபாயில் ஐந்தரை இலட்சம் மதிப்புள்ள போலி நாணயத்தாள் இருந்ததை கண்டு பிடித்து,அதனை பொலிஸார் பறிமுதல் செய்தனர். 

போலி நாணயத்தாள்களை காரில் கடத்தி  சென்ற ஒரத்தநாடு மகேந்திரன் (33), கருக்காடிப்பட்டி முருகானந்தம் (28), திருச்சி ஏர்போர்ட் அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்த அபுஅபி (38) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த போலி நாணயத்தாள்கள் திருச்சியில் புழக்கத்தில் விட எடுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.