(நா.தனுஜா)
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்டமையினாலேயே குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப்பொலிஸ்மாதிபர் நுவன் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என்று அரசாங்கத்தின் ஊடகப்பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பிலுள்ள அரசாங்கத்தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
கேள்வி : குற்றப்புலனாய்வுப் பிரிவின் பிரதானி பிரதிப்பொலிஸ்மாதிபர் நுவன் வெதசிங்க இடமாற்றம் செய்யப்பட்டார். இவர் இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்ட சம்பவத்துடனேயே நேரடியாகத் தொடர்புபடுகின்றது. எனவே உண்மையில் இந்த இடமாற்றத்திற்கான காரணம் என்ன? இதுவிடயத்தில் ஜனாதிபதியினால் ஏதேனும் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதா?
பதில் : இது நிர்வாக ரீதியில் மேற்கொள்ளப்பட்டதொரு தீர்மானமாகும். நீங்கள் கூறுவதைப்போன்று ரிஷாட் பதியுதீனின் சகோதரர் விடுதலை செய்யப்பட்ட விவகாரத்துடன் தொடர்புடைய விதமாகவே இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என்று கருதுகிறேன். ஏனென்றால் அண்மையில் அதுகுறித்தே அதிகளவில் பேசப்பட்டது. இது முற்றுமுழுதாக பொலிஸ் நிர்வாகம் மற்றும் சட்டம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சினையாகும்.
கேள்வி : கடந்த அரசாங்கம் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளைப் பயன்படுத்தியே பல்வேறு நபர்கள் மீதும் வழக்குகளைத் தொடுத்தது என்று நீங்கள் குற்றஞ்சாட்டினீர்கள். அவ்வாறெனில் தற்போது இவ்விடயத்திலும் பாரிய சிக்கல் இருக்கிறதல்லவா? ரிஷாட்டின் சகோதரர் பல மாதகாலமாகக் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு திடீரென்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார் அல்லவா?
பதில் : 'கடந்த காலத்தில் இடம்பெற்றதைப் போன்று எவரையேனும் தன்னிச்சையாகக் கைது செய்வதற்கோ அல்லது விடுதலை செய்வதற்கோ ஏற்றவகையிலான அதிகாரங்களை அரசியல்வாதிகளுக்கு வழங்குவதற்கு நான் தயாரில்லை. எனவே இதுவிடயத்தில் உரிய விசாரணைகளின் பின்னர் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று ஜனாதிபதி ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதுவிடயத்தில் சட்டத்தின் பிரகாரம் உரியவாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படாமையினால் இந்த இடமாற்றம் இடம்பெற்றிருக்கக்கூடும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM