சிங்கப்பூர்  கொரோனா வைரஸ் பரவல் காலக்கட்டத்தில் குழந்தைகளை பிரசிவிக்கும் தாய்மார்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், புதிதாக குழந்தைகளை பிரசவிக்கும் தாய்மார்கள் கட்டணம் தெலுத்த வேண்டிய தேவையில்லை என அறிவித்துள்ளது.

சிங்கப்பூர்  மக்கள் தொழில் வாய்ப்பு இன்மை காரணமாகவும், மன அழுத்தங்கள் காரணமாகவும் குழந்தைகளை பிரசவிப்பதை தாமதித்து வருகின்றனர்.

சிங்கப்பூரில் குழந்தைகள் பிறப்பு வீதம் மிகவும் குறைவாகும். இதனை ஊக்குவிக்கும் வகையிலேயே இந்த கட்டண தள்ளுபடியை சிங்கபூர் அரசு அறிவித்துள்ளது.

இதேவேளை சிங்கப்பூருக்கு அருகிலுள்ள பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் கொரோனா பரவல் காலகட்டத்தில் பெருமளவானோர் குழந்தைகளை பிரசவித்துள்ளனர்.