இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் கொரோனா..! இதோ தற்போதைய நிலைவரம் !

Published By: J.G.Stephan

06 Oct, 2020 | 01:37 PM
image

மினுவாங்கொடை, திவுலப்பிட்டிய ஆடை தொழிற்சலையில் மேலும் 246 ஊழியர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொடையில் கொரோனா கொத்தணி பரவலால் இதுவரை மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 569 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் நேற்றைய தினம் 5 ஆம் திகதி 101 நபர்கள் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அதன்பின்னர் 220 பேர் கொரோனா தொற்றாளர்களா அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில்,தற்போது 246 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஆடை தொழிற்சலையின் 39 வயதுடைய பெண் ஊழியர் கடந்த சனிக்கிழமை இரவு கொரோனா தொற்றுக்குள்ளாகியதாக அடையாளம் காணப்பட்டார்.

அதனையடுத்து அவரது மகளிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். சோதனைகளில் அவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிந்த யாழ்ப்பாணம் மற்றும் மொனராகலையைச் சேர்ந்த தலா ஒருவரும், குருணாகலைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் மீரிகம, குருணாகல், கட்டான, திவுலப்பிட்டிய, மொனராகலை, யாழ்ப்பாணம், சீதுவ, ஜா - எல, மகர ஆகிய பிரதேசங்களிலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இதுவரை 569 பேர் கொரோனா தொற்று தொடர்பில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..
மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஊடகவியலாளர் லசந்த படுகொலை : 3...

2025-02-13 14:49:33
news-image

மீகொடையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் உப பொலிஸ்...

2025-02-13 14:48:25
news-image

காற்றாலை மின்திட்டத்திலிருந்து விலகல் - அதானி...

2025-02-13 14:33:51
news-image

கத்தி முனையில் மிரட்டிய பாதுகாப்பு உத்தியோகத்தர்...

2025-02-13 14:06:19
news-image

பொலிஸ் அதிகாரியின் காதை கடித்து காயப்படுத்திய...

2025-02-13 14:56:50
news-image

கைவிடப்பட்ட நிலையில் கடுகண்ணாவை புகையிரத அருங்காட்சியகம்

2025-02-13 14:55:22
news-image

ரிதியாகம பூங்காவில் 6 சிங்கக்குட்டிகளுக்கு பெயர்சூட்டப்பட்டது

2025-02-13 13:29:21
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-13 12:54:39
news-image

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் பிரதமர்...

2025-02-13 13:46:35
news-image

நாடு கடத்தப்பட்டார் இந்தியாவில் தலைமறைவாகியிருந்த சுமித்...

2025-02-13 13:43:14
news-image

ஊடகத்துறையின் விருட்சம் விடைபெற்றுவிட்டது! - பாரதி...

2025-02-13 14:12:46
news-image

யாழில் 13 வயதான மகளை அடித்து...

2025-02-13 12:40:57