நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சம் காரணமாகதேசிய அடையாள அட்டையை பெற்றுக் கொள்வதற்கான ஒரு நாள் சேவை எதிர்வரும் 3 நாட்களுக்கு  இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகம்  மற்றும் அலுவலகத்தில் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகிளில் பொது மக்கள் சேவைகள் இடம்பெற மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏதேனும் அவசர தேவைகள் இருப்பின் பிரதேச செயலகங்களிலுள்ள ஆட்பதிவு பிரிவிற்கு அறிவிப்பதன் மூலம் சேவையைப் பெற்றுக் கொள்ள முடியும். 

எனினும் ஆட்பதிவு திணைக்களத்தில் இடம்பெறுகின்ற ஏனைய அலுவலக சாதாரண சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என்றார்.