கஜகஸ்தானின் மிகப்பெரிய நகரமான அல்மாட்டியில் இன்று ஆயுதங்களுடன் காரில் வந்த 2 நபர்கள் திடீரென பொலிஸ் நிலையம் மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகம் மீது தாக்குதல் நடத்தினர்.
பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸ் அதிகாரி ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறித்துச் சென்றுள்ளனர்.
இதையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற பொலிஸார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 2 பொலிஸார் உயிரிழந்தனர். பின்னர் அந்த காரை மடக்கிய பொலிஸார், காருக்குள் இருந்த ஒருவனை கைது செய்யும் வேளையில் மற்றொருவன் தப்பி ஓடிவிட்டான்.
இதுபற்றி பொலிஸார் நடத்திய விசாரணையில், பிடிபட்ட நபர் ஏற்கனவே குற்ற வழக்கில் தண்டிக்கப்பட்ட 27 வயதுடையவர் என்பது தெரியவந்தது. முன்னதாக கார் கடத்தலின்போது ஒருவரை கொன்றதும் தெரியவந்தது.
இந்த சம்பவங்களால் நகர் முழுவதும் பரபரப்பும் பதட்டமும் ஏற்பட்டது. மக்கள் கூடும் இடங்களில் பொலிஸார் குவிக்கப்பட்டனர். பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.
கஜகஸ்தானில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM