நடிகை நயன்தாரா தேசிய விருது வாங்கிய பிறகுதான் திருமணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரைப்படத்தின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டார். அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அது தவிர ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து வருகிறார்.

நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார். 

நயன்தாராவுக்கு முன்பே ‘அறம்’ படத்தில் நடித்ததற்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும் குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை.

நடிகை நயன்தாரா, தேசிய விருது வாங்கிய பிறகுதான், திருமணம் என உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.