வவுனியாவில் 98 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை 

Published By: Digital Desk 4

06 Oct, 2020 | 12:03 PM
image

கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்ததையடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கைகளிற்காக வவுனியாவில் பல்வேறுபட்ட நபர்களிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ்பல்கலைக்கழக வவுனியா வளாகத்தில் கல்வி பயின்றுவரும் கம்பஹா மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சேர்ந்த 90 பேருக்கு இன்றையதினம் காலை வவுனியா பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனையால் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அத்துடன் வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் உறவினர்களை மினுவாங்கொடையில் இருந்து வருகைதந்து சந்தித்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி, 3 சிறுபிள்ளைகள் என 5பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த பெண் தொடர்புகளை பேணியதாக தெரிவித்து வவுனியா நகர்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் இரு பெண்களுக்கும் பி.சி.ஆர் பரிசோதனைகளிற்கு உட்படுத்தப்பட்டனர். 

எனினும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட தமது சகோதரி கடந்தமாதம் 10 ஆம் திகதியே தமது வீட்டிற்கு இறுதியாக வந்ததாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இதேவேளை சேகரிக்கப்பட்ட மாதிரிகள் யாழ் போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

3 கோடி ரூபா பெறுமதியான போதைமாத்திரைகளை...

2024-04-14 12:51:19
news-image

யாழ் நகரின் சுகாதார நிலைமைகள் தொடர்பில்...

2024-04-14 12:21:07
news-image

வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் கொழும்பு, ஹம்பகா,...

2024-04-14 07:01:00
news-image

காலியிலிருந்து சுற்றுலா சென்றவர்களின் வேன் பண்டாரவளையில்...

2024-04-13 20:07:33
news-image

மருத்துநீர் வழங்கும் நிகழ்வு !

2024-04-13 19:55:36
news-image

மட்டக்களப்பு வாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை...

2024-04-13 19:50:47
news-image

இன்று பிறக்கிறது குரோதி புதுவருடம் ! 

2024-04-13 15:44:56
news-image

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட சந்தை...

2024-04-13 15:32:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக...

2024-04-13 15:33:20
news-image

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா சிறையிலிருந்த 10...

2024-04-13 15:28:49
news-image

கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் வாள்கள், பொல்லுகளுடன்...

2024-04-13 15:09:06
news-image

இன்றைய வானிலை

2024-04-13 06:21:24