தேசிய விளையாட்டு விழா கொரோனா அச்சுறுத்தலால் பிற்போடப்பட்டது

By Gayathri

06 Oct, 2020 | 12:37 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்ற காரணத்தினால் எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் கதிர்காமத்தில் நடத்தப்படவிருந்த மரதன் ஓட்டப் போட்டி,  வேகநடை போட்டி மற்றும் சைக்கிளோட்டப் போட்டி என்பன பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

இளைஞர் சேவைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் இணைந்து ஏற்பாடு செய்திரந்த 46 ஆவது தேசிய விளையாட்டு விழா எதிர்வரும் டிசெம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இதற்கு முன்னதாக எதிர்வரும் 10, 11  ஆம் திகதிகளில்  மரதன் ஓட்டப் போட்டி,  வேகநடை போட்டி மற்றும் சைக்கிளோட்டப் போட்டி உள்ளிட்ட ஏனைய போட்டிகளும் நடத்த ஏற்பாடாகியிருந்தன.

எனினும், தற்போது நாட்டில் மீண்டும் அதிகரித்துள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டிகள் அனைத்தையும் காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right