ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர் நஜீப் தராகாய் இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

29 வயதான அவர் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு விபத்தில் சிக்குண்டு, ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.

ஆப்கானிஸ்தானின் கிழக்கு நங்கர்ஹாரில் உள்ள சாலையொன்றை கடக்கும்போது அவர் காருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார்.

அவரது உயிரிழப்பு தொடர்பான தகவலை தனது டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகம், அதிரடியாக ஆடக்கூடிய நஜீப் தரகாய் யின் உயிரிழப்பு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு மிகப்பெரும் இழப்பு என்றும் கூறியுள்ளது.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்காக 12 சர்வதேச இருபதுக்கு -20 கிரக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தரகாய் 258 ஓட்டங்களை குவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.