கஹாதுடுவ பகுதியில் மூன்று சட்டவிரோத துப்பாக்கிகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் கைதுசெய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரி- 56 ரக துப்பாக்கி மற்றும் ஏ.கே . 47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேக நபரில் ஒருவர் கல்கிஸை பிரதேசத்தில் இருந்து துப்பாக்கிகளை கஹாதுடுவ பகுதிக்கு கொண்டு வந்துள்ள நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 37 , 49 வயதுடைய நபர்கள் இரத்மலானை பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரிவித்த பொலிஸார் , அவர்களை இன்று கெஸ்பேவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.