மத்திய கிழக்கில் தொழில்வாய்ப்புக்காக சென்ற மேலும் 302 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

அதன்படி கட்டாரிலிருந்து 35 இலங்கையர்கள் கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான கியூஆர் -668 என்ற விமானத்தில் அதிகாலை 1.45 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

அதேபோன்று கட்டார், தோஹாவிலிருந்து இலங்கை ஏயர்லைன்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யு.எல் -218 என்ற விமானத்தில் 7 இலங்கையர்கள் அதிகாலை 5.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

மேலும், துருக்கியிலிருந்து 260 இலங்கையர்கள் துருக்கிய ஏயர்லைனஸ் நிறுவனத்துக்கு சொந்தமான  டி.கே -4930 என்ற விமானத்தில் இஸ்தான்புலிருந்து காலை 8.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர். சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.