கொரோனா வைரஸ் தொடர்பில் போலிச் செய்தியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட 60 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தை பகுதியில் வசிக்கும் நபரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் போலி செய்தியிளை பரப்பி வந்துள்ளார்.

இந்நிலையிலேயே இவ்வாறு போலிச் செய்திகளை பரப்பிய சந்தேகத்தில் குறித்த நபர் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

எனினும் உண்மைக்கு புறம்பான செய்திகளை நம்பவேண்டாம் என பொதுமக்களுக்கு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.