வவுனியா தோணிக்கல் ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் சந்தித்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அக்குடும்பம் வவுனியாவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

More than 1200 ordered to self-quarantine in Mutuwal Housing Complex

வவுனியா ஆலடிப்பகுதியில் வசிக்கும் குடும்பமொன்றினை அண்மையில் ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணொருவர் சந்தித்து சென்றுள்ளார்.

இந்நிலையில் குறித்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து அவர் வவுனியாவில் சந்தித்த குடும்பத்தினரை தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த பகுதிக்கு மக்களை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

தோணிக்கல் ஆலடிப்பகுதியில் புகையிரத கடவைக்கு அருகாமையில் சிறிய கடையொன்றினை நடத்தி வரும் குடும்பமொன்றே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும் இன்று இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.