இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

Published By: Raam

18 Jul, 2016 | 09:10 PM
image

இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கிடையில் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தயாரித்து அமுல்ப்படுத்த ஆரம்பித்தவுடன் பொருளாதார, சமூக ரீதியாக பாரிய வெற்றிகளை இருநாடும் பெற்றுக்கொள்ளும் என சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுங் தெரிவித்தார்.

மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே அந்நாட்டு பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இஸ்தானா மாளிகையில் சிங்கப்பூர் பிரதமரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் இராணுவ அணிவகுப்பும் வழங்கப்பட்டது.

அங்கு சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியேன் லுங் மேலும் குறிப்பிடுகையில்,

நீண்ட காலமாக இரண்டு நாட்டுக்கும் இடையிலான மிகவும் வலுவான நட்புறவு காணப்படுகின்றது. கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட பிரிமா நிறுவனம் தற்போது இலங்கை நிறுவனம் என்ற அளவிற்கு மக்களுக்கு நெருக்கமாகியுள்ளது.

அத்துடன் தேசிய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சீரான கொள்கையின் காரணமாக சிங்கப்பூர் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு தயாராக உள்ளது.

மேல் மாகாண மெகா பொலிஸ் திட்டம் மற்றும் திருகோணமலை அபிவிருத்தி திட்டங்கள் சிங்கப்பூர் சுபோனா ஜூரோங் நிறுவனத்தின் ஊடாக நடைமுறைப்படுத்தவுள்ளோம்.மேலும் சுற்றுலா அபிவிருத்தியின் போது சிங்கப்பூர் முதலீட்டாளர்களுடான தொடர்பை வலுப்படுத்த முனைவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை தென் ஆசியாவின் இஸ்லாமியர்களுக்கான விசேட மாநாடு ஒன்றினை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் தயாராகி வருகின்றது.இதன்படி குறித்த மாநாட்டிற்கு நாம் பூரண ஆதரவினை வழங்கவுள்ளோம் என சிங்கப்பூர் பிரதமர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13