மாா்கஸ் ஸ்டொய்னஸின் அரை சதத்தின் உதவியுடன் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி 196 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 19 ஆவது போட்டி விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையே இன்று ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூரு அணி களத்தடுப்பை தேர்வுசெய்ய டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் முதலாவது விக்கெட்டுக்காக 68 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர்.

அதன் பின்னர் 7 ஆவது ஓவரின் நான்காவது பந்து வீச்சில் பிருத்வி ஷா 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேற, தவானும் 10.4 ஆவது ஓவரில் 32 ஓட்டங்களுடன் இசுறு உதானவின் பந்து வீச்சில் மொய்ன் அலியிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த அணித் தலைவர் ஸ்ரேயஸ் அய்யரும் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனால் டெல்லி அணி 11.3 ஓவர்களில் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 90 ஓட்டங்களை பெற்றது.

4 ஆவது விக்கெட்டுக்காக மாா்கஸ் ஸ்டொய்னஸ் மற்றும் ரிஷாத் பந்த் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட டெல்லி அணி 15 ஓவர்கள் நிறைவில் 134 ஓட்டங்களையும், 18 ஓவர்கள் நிறைவில் 171 ஓட்டங்களையும் குவித்தது.

ஆடுகளத்தில் மாா்கஸ் ஸ்டாய்னஸ் ஓட்டங்களுடனும், ரிஷாத் பந்த் 31 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாடி வந்தனர்.

எனினும் 19 ஆவது ஓவரின் இரண்டாவது பந்து வீச்சில் ரிஷாத் பந்த் 37 ஓட்டங்களுடன் சிராஜ்ஜின் பந்துப் பரிமாற்றத்தில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து நடையை கட்டினார்.

தொடர்ந்து சிம்ரன் ஹெட்மேயர் களமிறங்க அவருடன் கைகோர்த்த ஸ்டொய்னஸ் 19 ஓவரின் நிறைவில் ஒரு பவுண்டரியுடன் மொத்தமாக 24 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் அடங்கலாக அரைதம் கடந்தார்.

இறுதியாக டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை குவித்தது. 

ஆடுகளத்தில் ஸ்டாய்னஸ் ஓட்டங்களுடனும், சிம்ரேன் ஹேட்மேயர் ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

மாா்கஸ் ஸ்டாய்னிஸ் 53 ஒட்டங்களுடனும், சிம்ரன் ஹேட்மேயர் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.