மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும்  புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருவருக்கு தொற்று  இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்  வைத்தியர்  த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்

கம்பஹா மாவட்டம் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை பெண் பணியாளருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்றுமுன்தினமிரவு கண்டறியப்பட்டுள்ள நிலையில் அங்கு பணி புரியும் புங்குடுதீவைச் சேர்ந்த பெண்கள் இருவர் உட்பட அவர்களுடன் தொடர்புடையவர்கள் என 20 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஆடைத் தொழிற்சாலையில் புங்குடுதீவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் ஒருவர் கடந்த 30ஆம் திகதி வீடு திரும்பியுள்ளார்.

அவர் கடந்த 4 நாட்களில் பழகியவர்கள் தொடர்பில் தகவல் பெறப்பட்டு அவர்கள் அனைவரும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் மற்றைய பெண்  ஞாயிற்றுக்கிழமையே வீடு திரும்பியுள்ளார். அவரது குடும்பமும் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். 

நேற்றைய தினம் வீடு திரும்பிய பெண்ணுக்கே கோரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

 இதேவேளை கோரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்ட புங்குடுதீவைச் சேர்ந்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்படவுள்ளார் என  வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.