நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் குறித்து ஏமாற்றம் அடையக் கூடாது என்று அரசாங்கம் பொது மக்களிடம் வலியுறுத்தியுள்ளது.

கொவிட்-19  நிலைமைகள் காரணமாக நாளை முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளதாக சமூக ஊடகங்களில் இன்று தகவல்கள் வெளியாகியிருந்தது.

இதன் பின்னர் அதனை தெளிவுபடுத்தும் வகையில் ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்ட அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.