இலங்கை பெருமளவு நாடுகளுடன் பரஸ்பர பயன்களை அடிப்படையாகக் கொண்ட உறுதியானதும் ஆரோக்கியமானதுமான உறவுகளை வளர்த்துக் கொள்ளவதை அமெரிக்கா ஊக்குவிக்கிறது. சீனாவூடனும் இலங்கை அவ்வாறு நெருக்கமான உறவூகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால்,  சீனாவூடன் இலங்கை வளர்த்துக் கொள்ளும் உறவுகள் அதன் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பதாகவும் ஒரு குறிப்பிட்ட மேல்நிலை வர்க்கத்தினருக்காக அன்றி இலங்கை மக்கள் சகலருக்கும் உண்மையான சுபீட்சத்தைக் கொண்டு வருவதாக இருக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. ரெப்லிற்ஸ் கூறியிருக்கிறார்.

அமெரிக்க தூதுவர் இன்று டெய்லி மிரர் பத்திரிகைக்கு விரிவான நேர்காணலொன்றை வழங்கியிருக்கிறார். அதில் அவர் இலங்கையில் சீனாவின் பங்கு தொடர்பில் அமெரிக்காவின் அக்கறைகள், சர்ச்சைக்குரிய மிலேனியம் செலன்ஞ் கோப்ரேஷன் (எம். சி. சி) உடன்படிக்கை மற்றும் இலங்கையுடனான அமெரிக்காவின் இரு தரப்பு உறவுகள் உட்பட பல முக்கியமான விவகாரங்கள் குறித்து விளக்கமாக பதில் அளித்திருக்கிறார்.

அந்த நேர்காணலின் முக்கியமான அம்சங்களை சுருக்கமாகத் தருகிறோம்.

நிர்வாகங்கள் மாறும் போது இருதரப்பு உறவுகளில் சிறு மாற்றங்கள் ஏற்படுகின்ற கால கட்டங்கள் எப்போதும் இருக்கவே செய்கின்றன. ஆனால், ஒட்டுமொத்த உறவு முறையின் வீச்செல்லையே முக்கியமாக நோக்கப்பட வேண்டிய விடயமாகும். அத்தகைய கட்டமைப்பின் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுமுறை உறுதியானதும் விரிவாற்றல் கொண்டதுமாக தொடர்ந்தும் இருந்து வருகிறது.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு வர்த்தக உறவுமுறை இலங்கை உலக நாடுகளுடன் கொண்டிருக்கும் வர்த்தக உறவு முறைகளில் மிகவும் பெரியதாக விளங்குகிறது. அது இலங்கையின் நிகர உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதமாக இருப்பதுடன் இலங்கையர்களுக்கு பயனுறுதிவுடைய தொழில் வாய்ப்புக்களைவும் உருவாக்குகிறது. எமது கணிப்பின் படி அமெரிக்காவுக்கு ஏற்றுமதிகளை செய்வும் இலங்கையர்கள் இலங்கையில்
குறைந்த பட்சம் 180,000 பேருக்கு நேரடி தொழில் வாய்ப்புக்களை வழங்குகிறார்கள்.

இது கடந்த பல தசாப்தங்களாக அமெரிக்க மக்களினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 200 கோடிக்கும் அதிகமான மானிய உதவிக்கு மேலதிகமானதாகும்.

ஒவ்வொரு தோழமைவும் வளர்ச்சிக்கும் கலந்தாலோசனைக்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. உறவு முறையின் சகல அம்சங்களிலும் தற்போது இலங்கை நிர்வாகத்துடன் நாம் தொடர்ந்து பணியாற்ற எதிர்பார்த்திருக்கிறௌம். அண்மையில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத் தொடருக்கு உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் உண்மையான தேவைகளை நிறைவேற்றக்கூடிய நிலைபேறான தீர்வுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கும் சர்வதேச அமைப்புக்களுக்கும் இருக்கின்ற பொறுப்பு குறித்து வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் பிரகடனங்களில் பொதித்திருக்கும் விழுமியங்களுக்கு மதிப்பு கொடுத்து நாடுகள் அவற்றின் பிரஜைகளின் பொருளாதார மற்றும் சமூகத் தேவைகளை நிறைவேற்றுகின்ற நிலையில் அமெரிக்கா உலகளாவிய ரீதியில்  ஜனநாயகங்களை ஆதரிக்கிறது.

எம். சி. சி உடன்படிக்கை

இலங்கை அரசாங்கத்திடமிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்ட பின்னரே எம். சி. சி நன்கொடை உதவியை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் முன்வந்தது. அமெரிக்க அரசாங்கத்தின் ஒரு அபிவிருத்தி நிறுவனமான எம். சி. சி யின் தாபக சாசனத்தில் தவிர்க்க முடியாத இலக்குகளாகக் கூறப்பட்டிருக்கும் வறுமை ஒழிப்பு மற்றும் சகல சமூகங்களையும் தழுவிய பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை தொடர்பில் விடுக்கப்படுகின்ற வேண்டுகோளுக்கு பதிலளிப்பதே எமது இலக்காகும்.

உத்தேச எம். சி. சி அபிவிருத்தி உதவி செயற்திட்டத்தை முன்னெடுப்பதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது இலங்கை அரசாங்கத்தின் கையிலேயே உள்ளது. அபிவிருத்தி திட்டங்களை வகுக்கின்ற அரசியல் சார்பற்றதும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டதுமான ஒரு கலந்தாலோசனை கட்டமைப்பாக இருக்கின்ற எம். சி. சி உடன்படிக்கை இலங்கையில் அரசியல்மயப்படுத்தப்பட்டது பெரும் வெட்கக்கேடாகும்.

எம். சி. சி உடன்படிக்கையின் கீழான 480 மில்லியன் டொலர்கள் மானிய உதவி செயற்திட்டம் ஒரு கடன் அல்ல. இது வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதன் மூலமூம் சந்தைகளுக்கு விவசாய உற்பத்திகளை விரைவாகக் கொண்டு செல்வதற்கு உதவூவதன் மூலமூம் பாதுகாப்பான பொதுப் போக்குவரத்தை ஏற்பாடு செய்வதன் மூலமூம் 1 கோடியே 10 இலட்சத்துக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு நேரடியான பயனைத் தரக்கூடியதாகும். இந்த பிரச்சினைகள் இலங்கையர்களுக்கு மிகவூம் அழுத்தம் கொடுக்கின்றவையாக இருப்பதை தினமும் பத்திரிகைகளில் பார்க்கிறௌம். ஆராய்ச்சி மற்றும் பொருளாதார ஆய்வூ மூலமாக இலங்கையர்களால் அடையாளங் காணப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வூ காண உதவூவதே எம். சி. சி உடன்படிக்கையின் நோக்கமாகும்.

சீனாவுடனான இலங்கையின் உறவுகள்

இலங்கை சீனாவுடன் நீண்ட காலமாக உறவைக் கொண்டிருக்கிறது. நாடுகளுக்கிடையிலான தோழமை  உறவுகள் திறந்த போக்குடையவையாக – ஒளிவு மறைவு அற்றவையாக – பரஸ்பரம் பயன்தரக் கூடியவையாக இருக்க வேண்டுமென்று அமெரிக்கா நம்புகிறது. சீனாவுடனான இலங்கை உறவுகள் இந்த அம்சங்களையே உருவகிப்பதாக இருந்தால்  நாம் அந்த உறவை உற்சாகப்படுத்துவோம்.

மற்றைய நாடுகளுடனான உறவுகளைப் பொறுத்த வரை இலங்கை எளிதில் பாதிக்கப்படக் கூடிய ஒரு நாடாக இருக்கக் கூடாதென்பதே எமது அக்கறையாகும். நிலைபேறானதும் சுற்றுச் சூழலுக்கு நேசமானதும் கட்டுப்படியாகக் கூடியதுமான விளை பயன்களை தரக்கூடிய சிறந்த ஒப்பந்தங்கள்  தொடர்பில் இலங்கையினால் பேச்சுவார்த்தைகளை நடத்தக் கூடியதாக இருக்க வேண்டும்.

மற்றைய நாடுகளுடனான அல்லது அமெரிக்காவூடனான இலங்கையின் உறவு முறைகளின் தரம் குறித்து அமெரிக்கா எந்த அறிவுறுத்தலையும் வழங்குவதில்லை. சீனாவின் நிதியுதவியூடனான ‘மண்டலமும் பாதையும்’ செயற்திட்டத்தின் கீழான அபிவிருத்தி திட்டங்களில் 60 வீதமானவை சீனக் கம்பனிகளுக்கே வழங்கப்படுவதாகவும் அவை தொடர்பான ஒப்பந்த செயன்முறைகள் தௌpவற்றவையாக இருப்பதாகவும் 2019 உலக வங்கியின் ஆய்வொன்றில் கூறப்பட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும்.