திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த 2,000 பேரிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை இன்றைய தினத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்றைய தினம், திவுலபிட்டிய பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மற்றும் அவருடைய மகள் கொரோனா தொற்றுக்கு உள்ளதையடுத்து திவுலபிட்டிய மற்றும் மினுவங்கொட பொலிஸ் பிரிவுகளில் பிறப்பிக்கப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்றுக்குள்ளான பெண்ணின் மினுவங்கொட தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் அவருடம் தொடர்புடைய 2,000 பேரிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகளை இன்றைய தினத்திற்குள் மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா திவுலபிடிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றால் அடையாளம் காணப்பட்டுள்ளதையடுத்து அரசாங்கம் குறித்த பிரதேசத்தை சேர்ந்த 7 கிராமசேவகர் பிரிவுகளுக்கு பொலிஸ் ஊரடங்கு பிறப்பித்துள்ளதுடன் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கியுள்ளது.

இதேவேளை நாட்டில் ஏற்பட்டிருக்கும் கொரோனா தொற்று காரணமாக  மக்கள் மத்தியில் திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து அரசாங்கம் நாடெங்கும் ஊரடங்கு சட்டத்தை பிறப்பித்து நிலைமையை கட்டுப்படுத்தலாம் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் பெருமளவு பொருட்களை கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்தி வருகின்றனர்.

இதேவேளை இன்றைய தினம் பொதுபோக்குவரத்தில் குறைந்தளவு பயணிகளே பயணம் செய்திருந்ததுடன் அலுவலங்களுக்கும் குறைந்தளவிலான ஊழியர்களே வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் திவுலபிடிய பகுதியில் கொரொனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர் என அடையாளம் காணப்பட்ட பெண்ணுடன் தொடர்பை பேணிய 2 ஆயிரம் பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

 கொரொனா  தொற்றுக்குள்ளான பெண் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின்  ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோருக்கே இவ்வாறு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது மினுவாங்கொட பகுதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையின் மொத்தம் 69 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி மினுவாங்கொட பகுதியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது.

 மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொட மற்றும் திவுலபிடிய பகுதியில் உள்ள 07 கிராம சேவகர் பிரிவுகளுக்கும் வெயங்கொட பொலிஸ் பிரிவிற்கும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை திவுலபிடிய பிரதேசத்தைச் சேர்ந்த சுமார் 1,300 மாணவர்கள் தனிமைப்படுத்தலுக்காக, தற்போது அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாம் அலையாகவே தற்போதைய நிலைமை இலங்கையில் உருவாகியுள்ளது என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

 கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இராணுவமும், புலனாய்வுத்துறையும், சுகாதார அதிகாரிகளும் எவ்வாறு செயற்பட்டனரோ அதேபோல் இந்த அலையையும் கட்டுப்படுத்த சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 இதேவேளை அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்கள் மற்றும் ஒன்றுகூடல்களை நிறுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சிறைசாலைகளிலும் உள்ள கைதிகளைப் பார்வையிட மறு அறிவித்தல் வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

 பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சில பகுதிகள், மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை தரும் மற்றும் வெளியேறும் பிரதேசங்கள், பொதுமக்கள் பார்வையிடும் கலரி ஆகியவை மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக இலங்கையின் விமான நிலைய விமான சேவைகள் பணிப்பாளர் ஷெஹான் சுமணசேகர தெரிவித்துள்ளார்.