ஆக்லாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று நியூஸிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் திங்கட்கிழமை அறிவித்துள்ளார்.

நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் இரண்டாவது அலையின் தாக்கம் கிட்டத்தட்ட குறைவடைந்துள்ள நிலையில் இவ்வாறு ஆக்லாந்தின் கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் ஜசிந்தா ஆர்டெர்ன் கூறினார்.

அதன்படி ஆக்லாந்தில் தொடர்ச்சியாக 10 ஆவது நாளாக புதிய கொரோனா தொற்றாளர்கள் எவரும் அடையாளம் காணப்படாத நிலையிலேயே இந்த வாரம் அங்கு விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நியூஸிலாந்தில் இதுவரை 1,855 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 25 பேர் உயிரிழந்தும் உளளனர்.

இதேவேளை நியூஸிலாந்தின் பொதுத் தேர்தலானது ஒக்டோபர் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.