மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மவுசாக்கலை தோட்ட சீட்டன் பிரிவில் இனறு காலை 9 மணியளவில்  குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தீ பற்றியதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

இந்த தீ பரவல் வீட்டில் சுவாமியறை பகுதியில் தீ ஏற்பட்டதாகவும் இதனால்  எவரும் பாதிக்கப்பட்ட வில்லை என்றும் ஆனால் அக்குடியிருப்பில் வசித்தவர்களின் உடமைகள் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அத்துடன் இத்தீயை தோட்ட மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.