நீல மாணிக்கத்தினாலான பாரம்பரிய தொல்பொருள் சிறப்பு மிக்க புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்க கொண்டு சென்ற சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொனராகலை குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மொனராகலை - கும்புக்கனை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குறித்த புத்தர் சிலையை 600 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்வதற்கு தயாராக வைத்திருந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
2 அங்குலம் நீளமுடைய நீல மாணிக்க கற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பாரம்பரிய தொல்பொருள் சிறப்புமிக்க புத்தர் சிலையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
றம்பேவ, அநுராதபுரம் மற்றும் பேராதெனிய பகுதிகளைச் சேர்ந்த 20, 26, 30 மற்றும் 40 வயது மதிக்கத்தக்க நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை மொனராகலை குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM