கம்பஹா, திவுலப்பிட்டிய பகுதியில் மாணவர்கள் குழுவொன்றை தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்றைய தினம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் குறித்த மாணவி கல்வி பயின்ற பாடசாலையைச் சேர்ந்த மாணவர்கள் குழுவொன்றையே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்னர்.
நேற்யை தினம் திவுலப்பிட்டிவைச் சேர்ந்த 39 வயது தாயொருவரும் அவரது 16 வயதுடைய மகளும் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டது.
இந் நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாணவர்களின் குழுவை தனிமைப்படுத்தப்படுத்தல் நிலயைத்துக்கு அனுப்பப்பட்டதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு மற்றொரு குழு சுய-தனிமைப்படுத்தப்படுவதாகவும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
திவுலப்பிட்டியவில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவரும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
39 வயதான பெண்ணின் கணவர் மற்றும் இரண்டு மகன்கள் தற்போது ஹபராதுவ தனிமைப்படுத்தப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட நபர் பணிபுரிந்த ஆடைத் தொழிற்சாலையின் 400 ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவர்களில் 150 பேருக்கு பி.சி.ஆர். சோதனைகள் நடத்தப்பட்டதாக இலங்கை இராணுவத்தினர் நேற்றிரவு கூறினர்.
இவர்களில் சோதனைகளின் முடிவுகள் இன்று காலை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் மினுவாங்கொடவில் அமைந்துள்ள குறித்த ஆடைத் தொழிற்சாலையின் 1,400 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் இன்று நடத்தப்படும் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், திவுலபிட்டி மற்றும் மினுவாங்கொடவைச் சேர்ந்த 750 க்கும் மேற்பட்ட நபர்களும் தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவுகளின் கீழ் உள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM