முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் சற்று முன்னர் ஆஜராகியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை செப்டெம்பர் 22 ஆம் திகதி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதற்கிணங்கவே அவர் இன்றைய தினம் ஆஜராகியுள்ளார். 

இதற்கிடையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபத விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.