கம்பஹா மாவட்டத்தில் வசிக்கும் துறைமுக அதிகாரசபை ஊழியர்கள் மேலதிக அறிவிப்பு வரும் வரை பணிக்கு திரும்பவேண்டாமென இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

கம்பஹா மாவட்டத்தின் திவூலபிட்டி மற்றும் மினுவங்கொட பொலிஸ் பகுதிகளில் வசிக்கும் அனைத்து துறைமுக அதிகாரசபை ஊழியர்களுக்குமே குறித்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கம்பஹா, மினுவாங்கொடை பகுதியில் அமைந்துள்ள ஆடை உற்பத்தி நிறுவனத்தின் பெண் உழியர் ஒருவரு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை இன்றைய தினம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கம்பஹா மாவட்டத்தின் மினுவாங்கொடை, திவுலபிட்டிய மற்றும் வெயாங்கொட  பொலிஸ் பரிவுகளுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்தே குறித்த பகுதிகளில் வசிக்கும்  அனைத்து துறைமுக அதிகாரசபை ஊழியர்களை மறுஅறிவித்தல் வரும்வரை பணிக்குத் திரும்பவேண்டாமென இலங்கை துறைமுக அதிகாரசபை கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.