தொழில்வாய்ப்புக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சென்ற 400 இலங்கையர்கள் இன்று மாலை நாடு திரும்பியுள்ளனர்.

இந்தக் குழுவானது எமிரேட்ஸ் விமானசேவைக்கு சொந்தமான ஈ.கே -650 என்ற விமானத்தின் மூலமாக மாலை 4.50 மணியளவில் மத்தள சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகள் அனைவரும் பி.சி.ஆர்.சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.