பந்து வீச்சாளர்கள் திட்டத்தை சரியாக செயற்படுத்தினர் - ரோஹித் ஷர்மா

04 Oct, 2020 | 05:06 PM
image

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் எமது பந்து வீச்சாளர்கள், திட்டத்தை சரியாக செயற்படுத்தினார்கள் என, மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவரான ரோஹித் ஷர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.

 13-ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது. 

அபிதாபியில் நேற்று நடைபெற்ற 13 ஆவது லீக்  போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது.

வெற்றிக் குறித்து மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவரான ரோஹித் ஷர்மா கூறுகையில்,

“இது ஒரு சிறந்த வெற்றி. எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எதிர்க்கொண்டு இறுதி வரை முன்னேற விரும்பினோம்.

ஹார்திக் பாண்டியா மற்றும் பொலார்ட் இறுதி கட்டத்தில் ஓட்டங்களை பெற்று கொடுத்தனர். இது போன்று நிறைய தடவைகள் செய்திருக்கிறார்கள். 

அவர்கள் இருவரும் நல்ல நிலையில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒட்டு மொத்தமாக துடுப்பாட்ட செயற்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

பந்து வீசுவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்திருந்தோம். அதையும் நாங்கள் செய்தோம்.

பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சிறப்பாக செயற்படுத்தினார்கள். நான் 5000 ஓட்டங்கள் கடந்ததை நன்றாக உணர்கிறேன். ஆனால் அதை நான் அதிகமாக பார்க்கவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியமானது”  என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகலடைந்த மும்பை...

2024-04-19 02:08:17
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49