குடிபோதையில் வீதியோரம் படுத்திருந்தவர்கள் மீது காரைச் செலுத்தி ஒருவரைக் கொன்ற வழக்கில் இருந்து பொலிவூட் நடிகர் சல்மான் கான் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

கடந்த 2002 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம்  திகதி இரவு மும்பை பந்த்ரா பகுதியில் பொலிவூட் நடிகர் சல்மான் கான் குடிபோதையில் காரைச் செலுத்தி வீதியோரம் படுத்திருந்தவர்கள் மீது ஏற்றியதில் ஒருவர் பலியானதுடன் 4 பேர் காயமடைந்தனர். 

இந்த வழக்கு கடந்த மே மாதம்  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மும்பை நீதிமன்றம் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இந்நிலையில் சல்மானுக்கு எதிராக அரச தரப்பில் அளிக்கப்பட்ட ஆதாரங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. சந்தேகத்தின்பேரில் அவருக்கு தண்டனை அளிக்க முடியாது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியான ரவீந்திர பாட்டிலின் வாக்குமூலம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை. சல்மான் கான் குடிபோதையில் காரை ஏற்றி ஒருவரை கொலை செய்தமைக்கு போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து நீதிபதி ஜோஷி தீர்ப்பு அளித்துள்ளார் .