பாதையை புனரமைத்து தருமாறு கோரும் மஸ்கெலியா பகுதி மக்கள்

Published By: Digital Desk 4

04 Oct, 2020 | 04:03 PM
image

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பிரவுன்லோ 49 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் பாதை புனரமைக்கப்படாமையால் அப்பகுதியில் உள்ள 35 குடும்பங்களை சேர்ந்த சுமார் 130 பேர் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் இப்பாதையை பயன்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.

அத்துடன் இப்பகுதியிலிருந்து பாடசாலை மாணவர்கள் மழை காலங்களில் சேற்றில் நடந்து செல்ல வேண்டியுள்ளதாகவும் இப்பாதையை பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என அனைவரும் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.ஆனால் இது வரை எவரும் பணிகளை ஆர்பித்ததாக தெரியவில்லை என்றும் குறிப்பிட்டனர்.

மேலும்,நாம் நகரத்திற்கு சென்று பொருட்களை கொள்வனவு செய்து திரும்பும் போது முச்சக்கரவண்டியை வாடகைக்கு எடுத்துச் செல்ல வேண்டுமேயானால் சுமார் ரூபாய் 500 அல்லது அதற்கு மேல் அறவிடுவதாகவும் ஆனால் அவ்வாறு வாடகை வழங்கினாலும் பலர் இப்பாதையில் வருவதற்கு விரும்புவதில்லை என்றும் இப்பகுதியில் வசித்து வரும் முதியோர் அல்லது யாரேனும் அவசரமாக சுகவீனமுற்றால் வைத்தியசாலை கொண்டு செல்ல பல இன்னல்களை சந்திக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி பிரதேச சபை உறுப்பினரிடம் கேட்டபோது,இப்பாதை அபிவிருத்திக்காக எனது வேண்கோளுக்கு இணங்க முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான இராகிருஸ்ணணின் பன்முகப்படுத்தபட்ட நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டபோதும் பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தால் அந்நிதி பெற முடியாது சென்றதாகவும் தற்போது பிரதேச செயலகத்தின் ஊடாக மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இப்பாதை புனரமைப்புபிற்காக வேண்டுகோள் ஒன்றை வழங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், அவ்வாறு பிரதேச செயலகத்தின் ஊடாக அபிவிருத்தி செய்யும் பட்சத்தில் இப்பாதை காபட் பாதையாக அமைவதுடன் பிரேமா, பழைய காணி பகுதி,49 குடியிருப்பு பகுதி மற்றும் 56 குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சுமார் ஆறு கிலோ மீற்றர் பாதை காபட் பாதையாக்கப்படும் என்றும் இப்பகுதி மக்களின் நலன் கருதி பேருந்து சேவையும் மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

2025-03-18 12:05:27
news-image

யாழ். குருநகரைச் சேர்ந்த காணாமல்போன மீனவர்களை...

2025-03-18 12:19:43
news-image

கடையின் சுவரை உடைத்து சேதப்படுத்திய காட்டு...

2025-03-18 12:17:33
news-image

மீன்பிடி அமைச்சால் கொண்டுவரவிருக்கும் கடற்றொழில் சட்டம்...

2025-03-18 11:57:48
news-image

நிலாவெளியில் வாகன விபத்து ; முச்சக்கரவண்டி...

2025-03-18 11:57:09
news-image

120 மில்லியன் ரூபாய் பெறுமதியான சிகரட்டுகள்...

2025-03-18 11:43:21
news-image

பாராளுமன்றம் பற்றி எழுதப்பட்ட இரண்டு நூல்கள்...

2025-03-18 11:56:33
news-image

“கணேமுல்ல சஞ்சீவ“ படுகொலை ; கைது...

2025-03-18 11:24:42
news-image

ஏப்ரல் மாதம் முதல் அதிகரிக்கப்படும் பால்மாவின்...

2025-03-18 11:20:29
news-image

ருவன்வெல்ல பகுதியில் கார் விபத்து ;...

2025-03-18 10:58:15
news-image

ஹட்டனில் மின்னல் தாக்கி மரம் முறிந்து...

2025-03-18 10:48:24
news-image

குஷ் போதைப்பொருளுடன் இந்திய தம்பதி கட்டுநாயக்கவில்...

2025-03-18 10:25:30