தெற்கு பிரான்ஸ் மற்றும் வடமேற்கு இத்தாலியை தாக்கிய சக்திவாய்ந்த புயல் காரணமாக குறைந்தது இருவர் உயிரழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல்போயும் உள்ளனர்.

அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலானது பலத்த மழையையும் வெள்ளத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸின் தெற்று நகரமான நைஸைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் இதனாமல் பலத்த சேதங்களுக்குள்ளானதாக அதன் மேயர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு இத்தாலியில், சாலைகள் மற்றும் பாலங்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன, அதே நேரத்தில் பல ஆறுகள் பெருக்கெடுத்தும் உள்ளன.

இந்த அனர்த்தத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுள் ஒருவர் இத்தாலியில் அமைந்துள்ள ஆஸ்டா பள்ளத்தாக்கில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஆவார். 

மற்றைய நபர் பீட்மாண்ட் பிராந்தியில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

நாட்டின் வடமேற்கில் ஒரே இரவில் பலத்த மழை பெய்ததால் மேலும் 17 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. அவர்களில் குறைந்தது நான்கு ஜேர்மன் மலையேற்ற வீரர்களின் ஒரு குழு உள்ளது. அவர்கள் மலைகளில் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.