கிளிநொச்சி - வண்டகச்சி - குடுகாடு பிரதேசத்திலுள்ள  கிணற்றிலிருந்து 5 வயது குழந்தையொன்றின் சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தை கடந்த 15 ஆம் திகதி காணாமற் போயுள்ளதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸாரும் அப்பிரதேச மக்களும் இணைந்து சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த குழந்தையின் சடலம் 2 நாட்களுக்குப் பின் வீட்டின் அருகேயிருந்த கிணற்றிலிருந்து கிடைக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையின் இறப்பிற்கான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.