நாட்டில் நேற்றைய தினம் கொரோனா வைரஸ் தொற்றுடைய 7 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவைகயில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும் , கட்டாரில் இருந்து நாடு திரும்பிய ஒருவர் உள்பட , ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 3395 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று கம்பஹா திவுலப்பிட்டிய பகுதியில் 39 வயதுடைய  பெண்ணொருவருக்கு மேற்கொள்ளப்பட் பி.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதோடு , 55 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

எனினம் நேற்றைய தினம் தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 9 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்குது.