அரசு ஊழியர்களுக்காக நிர்மானிக்ப்பட்டுள்ள பொரெல்லை, வனதமுல்ல “ஓவல் வியூ ரெசிடென்சி” அடுக்கு மாடிவீட்டுத் தொடர் எதிர்வரும் 05 ஆம் திகதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது. 

அரசு ஊழியர்களுக்கான வீட்டுவசதி திட்டத்தின்  கீழ் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தினால்  (யுடிஏ) நிர்மானிக்கப்பட்டு வந்த குறித்த அடுக்கு மாடிவீட்டுத் தொடரின் கட்டுமான பணிகள் முடித்துள்ள நிலையில் தற்போ மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட உள்ளது. 

பி.சரவணமுத்து விளையாட்டு அரங்குக்கு அருகே அமைந்துள்ளது இவ் வீட்டு திட்டத்தில்  உள்ள சுமார்  608 வீடுகளும் ஏற்கனவே 15-20 ஆண்டுகளில் அரசு சேவையில் ஈடுபட்டுள்ள அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விற்கப்பட்டுள்ளன.

இந்த திட்டத்திற்கு 6 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இதில்  மூன்று படுக்கையறைகளுடன் 304 வீடுகளும், இரண்டு படுக்கையறைகளுடன் 304 வீடுகளும் உள்ளன. 

குறித்த வீட்டு திட்ட வளாகத்தில் ஒரு கார் பார்க், குழந்தைகள் பூங்கா, இரண்டு உடற்பயிற்சி மையங்கள், ஒரு ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல வசதிகளும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.