இந்தியாவிலிருந்து இலங்கையின் மலையகப் பகுதிக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட ஒருதொகை போதைப்பொருளினை பொகவந்தலாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த போதைப்பொருள்களுடன் சந்தேக நபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

போதைப்பொருளினை சந்தேக நபர் குறித்த பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை நாளை (19) ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.