சர்வதேச நாடுகளின் உதவியுடன் இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்: சிவாஜிலிங்கம்

Published By: Gayathri

03 Oct, 2020 | 03:49 PM
image

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என தெரிவித்த முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஸ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி தவிர வேறுயெந்த முறையும் வராது என்பதுடன் ஜக்கியம், சமஸ்டி குறித்த பேச்சுக்கு இடமில்லை என சபை முதல்வரும் வெளிவிவகார அமைச்சருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்த கருத்து தொடர்பில் கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியல் அமைப்பு என்ற ஒன்று தேவையில்லை. ஏற்கனவே உள்ள அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்டவை. 

ஆகவே, எங்களுக்கு இலங்கைக்குள் தீர்வு இல்லையென்றால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஜக்கிய இலங்கைக்குள் அதி உச்சபட்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்.

அதுவும் சாத்தியம் இல்லையென்றால், நாங்கள் பிரிந்து சென்று தனி அரசை உருவாக்கவேண்டும் என்பதுதான் உங்கள் சிந்தனையாக இருந்தால், அதனைநோக்கி பயணிப்பதற்கும் நாங்கள் தயாராக இருக்கின்றோம் என அமைச்சருக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

ஒற்றையாட்சி அரசியலமைப்பின் மூலம் நாம் எங்களுக்குரியதை செய்ய முடியாது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை கேட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19
news-image

ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி -...

2025-02-16 20:52:46
news-image

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் பணவீக்கம்...

2025-02-16 16:20:02
news-image

சட்டவிரோதமான முறையில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற...

2025-02-16 21:42:35
news-image

முல்லைத்தீவிற்கு வருகை தந்த பிரதமர்; ஏமாற்றமடைந்த...

2025-02-16 21:44:11
news-image

அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் சக்தியாக மீண்டும்...

2025-02-16 21:30:13
news-image

வவுனியாவில் இளைஞனின் சடலம் மீட்பு

2025-02-16 21:17:06
news-image

யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி...

2025-02-16 19:59:52
news-image

பொதுச்செயலராக சுமந்திரன் நியனம்: இலங்கைத் தமிழரசுக்...

2025-02-16 21:27:42