ரஷ்யாவில் பத்திரிகையாளர் ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு  உயிரிழந்துள்ளார்.

ரஷ்யாவின், நிஸ்னி நோவ்கோரோட் நகரிலிருந்து வெளியாகும் கோசா பத்திரிகையின் தலைமை ஆசிரியையான 47 வயதான இரினா ஸ்லாவினா என்பவரே நேற்றைய தினம் ரஷ்யாவின் உள்துறை அமைச்சின் தலைமையகத்திற்கு முன்பாக இவ்வாறு தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டுள்ளார்.

Irina Slavina, 47, editor-in-chief of Koza Press, set herself on fire outside the headquarters of the Interior Ministry in Nizhny Novgorod near a statue for Russian policemen

கடந்த வியாழக்கிழமை குறித்த பத்திரையாளரின் வீட்டில் ரஷ்ய போலிசார் சோதனை மேற்கொண்டதுடன் அவரது மடிக்கணினிகள் மற்றும் குறிப்பேடுகளை பரிமுதல் செய்திதுள்ளனர்.

இதனையடுத்து இரினா ஸ்லாவினா 'எனது மரணத்திற்கு ரஷ்ய கூட்டமைப்பைக் குறை கூறும்படி கேட்டுக்கொள்கிறேன்.' என பதிவிட்டுள்ளதுடன் நிஷ்னி நோவ்கோரோட்டில் உள்ள  உள்துறை அமைச்சின் தலைமையகத்திற்கு வெளியே ரஷ்ய போலிஸாருக்கான சிலைக்கு அருகே  அவர் தனக்குத்தானே  தீ வைத்துக் கொண்டுள்ளார்.

A memorial has been set up at the site where Slavina set herself on fire. A picture of the journalist sits among flowers and candles

இவரை காப்பற்ற அயலில் இருந்தவர்கள் முயன்ற போதும் தீ காயங்கள் காரணமாக இவர் இறந்துள்ளார்.

உள்ளூர் தொழிலதிபர் தொடர்பான குற்றவியல் வழக்கு ஒன்றில் சாட்சியாக இவர் விசாரிக்கப்பட்டு வருவதையடுத்த இவ் தேடுதல் நவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இவ் தேடுதல் நடவடிக்கைகளின் பின், “அவர்கள் கண்டுபிடித்ததை எடுத்துக்கொண்டார்கள் - எல்லா ஃபிளாஷ் டிரைவ்கள், என் லேப்டாப், என் மகளின் மடிக்கணினி, கணினி, தொலைபேசிகள் - என்னுடையது மட்டுமல்ல, என் கணவரின் பத்திரிகைகளும், பத்திரிகையாளர் சந்திப்புகளின் போது நான் எழுதிய குறிப்பேடுகள்” என அவர் பதிவிட்டுள்ளார். 

இதேவேளை இவர் போலி செய்திகளை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டு இதற்கு முன்பாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.